கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரியில் உலக இருதுருவ கோளாறு தினம்

கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவக் கல்லூரி மனநல துறை இணைந்து உலக இருதுருவ கோளாறு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கே.எம்.சி.எச் மருத்துவக் கல்லூரியில் மனநல துறையின் மருத்துவர் சத்தியசீலன் வரவேற்புரை வழங்கினார். மேஜர் ஜெனரல் ரவிக்குமார் இருதுருவ கோளாறு பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். மருத்துவர்கள் சுகன்யா, பிரியதர்சினி, தக்ஷணபுஸ்பநாதன், கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி முதல்வர் மாதவி மற்றும் மோகனாம்பாள் செவிலியர் இயக்குனர் பலர் கலந்து கொண்டனர்.