எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா

கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் 21வது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பெங்களூர், ஏ.பி.பி. ஹைப்ரிட் ப்ராசஸ் இண்டஸ்ட்ரீஸின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அவர், டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேகத்தை சுட்டிக்காட்டிய அவர், செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் பயன்பாடுகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதை வலியுறுத்தினார். சீனா போன்ற நாடுகள் கூட சாலை அடைப்பு பிரச்சினைகளை தீர்க்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துகின்றன என்றார். மேலும், சேட்ஜிபிடி (ChatGPT), க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டிஜிட்டல் ட்வின்னிங் போன்ற கருவிகளின் அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும். என்றார்.

அதனைத் தொடர்ந்து, “இந்தியன் ஜர்னல் ஆன் டிசைன் திங்கிங்” புத்தகத்தின் முதல் பிரதியை தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார் வெளியிட்டார். எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்புகளுக்காக பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் எஸ்.என்.எஸ் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், இயக்குநர் அருணாசலம், துணை முதன்மை நிர்வாக இயக்குநர் தமிழ்ச்செல்வம், கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.