பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு டைமண்ட் விருது

டபிள்யு.எஸ்.ஓ (WSO) ஏஞ்சல்ஸ் எனும் உலக பக்கவாத அமைப்பு, பக்கவாதத்திற்கு எதிராக சிறப்பான முறையில் பணியாற்றி வரும் பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு டைமண்ட் விருதினை வழங்கி கௌரவித்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் உள்ள 38 மருத்துவமனைகளில் சிறந்த மருத்துமனையாக தேர்வு ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் டாக்டர் சுப்பாராவ், கதிரியக்கியவியல் தலைவர் தேவானந்த், அவசர சிகிச்சை பிரிவு தலைவர் மணி சுந்தர், நரம்பியல் சிகிச்சை துறை தலைவர் பாலகிருஷ்ணன், கதிரியக்கியவியல் உதவி பேராசிரியர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.