பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உலக காசநோய் விழிப்புணர்வு

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் சுவாசநல சிகிச்சைத்துறையின் சார்பாக பி.எஸ்.ஜி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உலக காசநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் காசநோய் சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் செவிலியர் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, இயன்முறை மருத்துவ கல்லூரியை சார்ந்த மாணவர்களின் மௌனமொழி நாடகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு வருகை புரிந்திருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி முடிவில் மாணாக்கர்களுக்கு பரிசளிப்பும் நடைபெற்றது.