நவீனப்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு

கோவை அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் நவீனபடுத்தப்பட்டுள்ளதை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சனிக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார். வாலாங்குளம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவையும், ஆர்.எஸ்.புரம் வ.உ.சி.வீதியில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இறகுபந்து மைதானத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், துணை ஆணையாளர் ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் முபசீரா, மாமன்ற உறுப்பினர் சுமா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.