
கோவை, வட்டமலைப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியும், மலேசியாவில் உள்ள ஆசிய பசிபிக் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாரயணசுவாமி மற்றும் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஹோ சின் குவான் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழவில், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை தலைவர்களும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் அலமேலு, ஏரோனாட்டிகள் துறை தலைவர் டேவிட் ரத்தினராஜ், பிசினஸ் ஸ்கூல் துறை தலைவர் மேரி மெட்டில்டா, பேராசிரியர் ஹரிஹர கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.