குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பிஸ்தா

பிஸ்தா பருப்பில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. ஆனால் பிஸ்தாவை பயிரிட்டு அதனை விற்பனைக்கு கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு பலகட்ட பணியாளர்கள் தேவை என்பதால், இதன் விலையும் அதிகமாக இருக்கிறது.

ஆனால் பிஸ்தாவில் அதிக நன்மைகள் இருக்கிறது. இருப்பினும் இதனை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பிஸ்தாவில் பால் தயாரித்து குடித்தால் நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது. இது பாதாம் பால் போல் எளிதில் கிடைக்காது, எனவே இதனை எளிதில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

பிஸ்தா விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த பிறகு காலையில் தோலை அகற்ற வேண்டும். பின்னர் பிஸ்தாவை மிக்ஸியில் அரைத்து வடிகட்டினால் அதில் வருவது தான் பிஸ்தா பால். இதன் சுவையை கூட்ட தேன் அல்லது நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம். மேலும் ஃபிரிட்ஜில் வைத்து இந்த பாலை மூன்று நாட்கள் வரை பருகலாம். இந்த பச்சை நிற பால் அனைத்து வயதினருக்கும் நன்மை தந்தாலும், குழந்தைகளின் வளர்ச்சி ஆரோக்கியமான மாற்றங்களை உண்டாக்கும்.

மேலும் குழந்தைகளின் உடலுக்கு வலு சேர்க்கவும் உதவுகிறது. பிஸ்தா பால் விலை உயர்ந்தது என்பதால் இது பலரால் புறக்கணிக்க படுகிறது. மாதம் ஒரு முறை பிஸ்தா பால் அருந்தினாலே உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.