ஆர்.வி.எஸ் கல்வியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்

கோவை, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஆர்.வி.எஸ் கல்வியியல் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்காணல் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு நேர்காணல் பி.எட். மற்றும் பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்காக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சைதன்யா சர்வதேச பள்ளி, அனுக்கிரகா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி, சுகபிரம்மா மகரிஷி வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்று தங்கள் பள்ளிக்குத் தேவையான ஆசிரியர்களைத் தேர்வு செய்தனர். ஆர்.வி.எஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.வி.குப்புசாமியின் வழிகாட்டுதல்படி, கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெயஸ்ரீ ராணி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் வனிதா, ஏகவள்ளி ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.

இந்த நேர்காணலின் மூலம் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைத் தேர்வு செய்தனர். வேலைவாய்ப்பை பெற்ற மாணவ மாணவிகளுக்கு அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.