500 மரக்கன்றுகளை நட்ட லயன்ஸ் இயக்கம்

கோவை மாவட்ட வனத்துறை, கொண்டையம்பாளையம் ஊராட்சி, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324சி, நேருநகர் அரிமா சங்கம், இயற்கை பவுண்டேஷன் மற்றும் கே.ஜி. கலை கல்லூரி இணைந்து கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள செந்தூர் கார்டன் மற்றும் அருள்கார்டன் குடியிருப்பு பகுதிகளில் உலக வனத்தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் செந்தில்குமார், மாவட்ட வனத்துறையின் உதவி வனபாதுகாவலர் தினேஷ்குமார், கொண்டையம்பாளையம் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சி துணைத் தலைவர் சண்முகசுந்தரம், நேருநகர் அரிமா சங்க செயலாளர்கள் லோகநாதன் மற்றும் கல்லூரி மாணவர்கள் பல சங்கங்களை சார்ந்தவர்கள் இதில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.