என்.ஜி.பி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியும், கோயம்புத்தூர் சிவில் பொறியாளர்கள் சங்கமும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

இதில் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி கட்டிட துறையில் பெருகி வரும் புதிய தொழில்நுட்பங்களை பற்றி விவரித்தார். அதனைத் தொடர்ந்து, சிவில் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் குமார் புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றியும் அதன் நன்மைகளை பற்றியும் கூறினார். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், கட்டுமான துறையில் வளரும் புதிய தொழில்நுட்பங்களை பற்றி அறிந்து கொள்ளவும் முடியும் என விவரித்தார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பிரபா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.