5 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை

சென்னை: நிலமற்ற பட்டியலின மக்களுக்கு அரசு சார்பில் தருவதற்காக ஒதுக்கப்படுவது பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது.

விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர், தருமபுரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒருசில வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.