இந்துஸ்தான் கல்லூரியின் சார்பில் 7 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம்

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் 7 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாமினை நடத்தி வருகின்றனர்.

20.3.2023 அன்று தொடங்கி 26.3.2023 வரை நடைபெறும் இம்முகாமின் இரண்டாம் நாளான இன்று கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் 70 பேர் தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியை, சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நட்டு கொடுத்தனர்.

அச்சமயம், மற்றோரு நிகழ்வுக்கு வருகை தந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களின் செயல்பாட்டை கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுடன் இணைந்து மரக்கன்று நட்டு வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். மேலும், ஏழு நாட்கள் நடைபெறக்கூடிய இந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமில், பல்வேறு விதமான நிகழ்வுகளை கல்லூரி செய்ய உள்ளது.

இம்முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான கருணாநிதி, வினோத்குமார், நித்திய லட்சுமி ஆகியோர் மாணவர்கள் கண்காணித்து முகாமை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.