உலக வனநாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக வன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை மாவட்ட வனத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து “Protect Forest for Better Future” என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வன நாள் குறித்தும், வனங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி,  கோவை மாவட்ட வனத்துறை அலுவலர் அசோக் குமார் உட்பட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும், கல்லூரி மைதானத்தில் வன நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்ட வனத்துறை அலுவலர், கல்லூரி முதல்வர் மரக்கன்றுகளை நட்டனர்.