என்.ஜி.பி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா (CSI) மற்றும் ஐ.சி.டி (ICT) அகாடமி உடன் இணைந்து “அட்வான்ஸ் கம்பியூட்டிங் சயின்சஸ் (NCACS– 2K23)” எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கத்தை அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸின் ஊழியர் தன்னார்வத் தொண்டு (CSR), அவுட்ரீச் இந்தியத் தலைவர், பாலகுமார் தனவேலு, சென்னை சி-டாக் பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் குழுமத்தின் இணை இயக்குநர் விஜயகுமார் கண்ணன் மற்றும் அசெனெட் டெக்னாலஜிஸ், கோயமுத்தூர் தலைமை நிர்வாக அதிகாரி ரங்க ராஜகோபால் ஆகியோர் அமர்வில் உரையாற்றினார்கள்.

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 1050 மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த படைப்புகளை அளித்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.