சங்கரா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 28 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் அறங்காவலர் மற்றும் செயலர் ராமச்சந்திரன் பட்டமளிப்பு விழாவைத் துவக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக சோஹோ கார்ப்பரேஷன் குழு நிறுவனர் மற்றும் சோஹோ கற்றல் பள்ளிகள் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி கலந்துகொண்டு பேசியதாவது: மாணவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான நல்லனவற்றை பல்வேறு இடங்களில் தேடிப்பெற்று புதியனவற்றைத் தனித்துவமாக உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும் கற்பித்தல், சுயமாக கற்றல், குழுவாகக் கற்றல் ஆகியவை நம்மை வாழ்க்கையில் உயர்த்தும். வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எங்கு நமக்கு தேவையான எது கிடைத்தாலும் அதனை நாம் நமது உயர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் இணைச் செயலர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச்செயலர் நித்யா ராமச்சந்திரன், சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர்கள் கல்யாணராமன் மற்றும் பட்டாபிராமன், கல்லூரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் எட்வர்ட் பெர்னார்ட் மற்றும் துறைத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்.