கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனையில் 2 நபர்களுக்கு 20% சலுகை

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யும், 35 வயதுக்கு மேற்பட்ட தம்பதிக்கு, கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. இந்த முகாம் ஞாயிறு தவிர, மார்ச் 31 வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மைய டாக்டர்கள் கூறியதாவது: பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ளவர்கள், நோய் உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிய விரும்புவோர், புகை, மது பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமின்றி, 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இப்பரிசோதனை மூலம், துவக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறலாம். இப்பரிசோதனைகளை ஒரே நாளில் மேற்கொண்டு, முடிவுகளையும் அன்றே தெரிந்து கொள்ளலாம்.

ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈ.சி.ஜி, டிஎம்டி, எக்கோ கார்டியோகிராம், மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் உள்ளன. நோயாளியின் பழக்க வழக்கங்கள், சந்தேகங்கள், அறிகுறிகளுக்கேற்ப பரிசோதனை விரிவடையும்.

ரத்த பரிசோதனையில் ரத்த சோகை, ரத்த புற்றுநோய் பாதிப்பு, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு அளவு கண்டறிவதன் மூலம் இருதயத்தின் தன்மையை அறிந்து கொள்ளலாம். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் புரோன்சிட்டிஸ் பரிசோதனை மூலம் நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்புகளை கண்டறியலாம். சர்க்கரை பரிசோதனையில், நீரழிவையும், ஈசிஜி, டிஎம்டி மற்றும் ஆஞ்சியோ மூலம் மாரடைப்பையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

கொழுப்பு படிந்த கல்லீரல், கல்லீரலில் ஹெபடைடீ்ஸ் பாதிப்பு, சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியலாம். இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் பித்தப்பை கற்கள், குடல் மற்றும் குடலுக்கு வெளியே உள்ள பாகங்கள், கிட்னி உள்ளிட்ட பகுதிகளில் பிராஸ்டேட் புற்றுநோய், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பையில் உள்ள புற்றுநோய் கட்டிகளை கண்டறியலாம்.

முழு உடல் பரிசோதனையில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்தந்த நோய்களுக்கேற்ப துறைரீதியான டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், உரிய சிகிச்சை மேற்கொண்டு குணமடையலாம் என தெரிவித்தனர்.

கே.எம்.சி.ஹெச். மெயின், அவிநாசி ரோடு, ராம்நகர், கோவில்பாளையம், சூலூர் மற்றும் ஈரோடு ஆகிய அனைத்து கிளைகளிலும் முகாம் நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு, 7339333485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.