இந்துஸ்தான் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் ஜெயா நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினராக மலேசியா ஏ.ஐ.எம்.எஸ்.டி பல்கலைக்கழகத்தின் (கல்வி மற்றும் சர்வதேச விவகாரங்கள்) துணைவேந்தர் மற்றும் மூத்த இணைப் பேராசிரியர் கதிரேசன் சதாசிவம் கலந்து கொண்டார். அவர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலைத்தன்மை குறித்து பல்வேறு தகவல்களை விரிவாக பேசினார்.

இதனை தொடர்ந்து “சமீபத்திய ஆராய்ச்சி ட்ரென்ட்ஸ்” குறித்து அனைத்து துறைத் தலைவர்களுடனும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் நடராஜன் , டீன் மகுடீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.