பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உறக்க தினம் அனுசரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17 ஆம் தேதி உலக உறக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று ஓய்வெடுக்கவே நேரமில்லாமல் வேலை வேலை என்று அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சரியான தூங்கும் நேரத்தை பலர் கடைபிடிப்பதில்லை. மேலும், பலருக்கும் தூங்க நேரம் கிடைக்காமலும் போகிறது.

சரியான தூக்கம் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே உலக உறக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையினால் தூக்கமின்மையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது. இதில் உறக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நுரையீரல் மருத்துவத்துறை சார்பாக இந்த விழிப்புணர்வு ஒருங்கிணைக்கப்பட்டது.