இந்துஸ்தான் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவை நவ இந்திய பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 25வது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பீளமேடு காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மரியமுத்து கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி மற்றும் உடற்கல்வித்துறை இயக்குனர் கருணாநிதி கலந்துகொண்டனர்.