ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஆண்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 21 வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் கோவை டிரைடென்ட் நியூமேடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இன்றைய மாணவ சமுதாயத்திற்கு நல்ல தொழில் அமைவதற்கு சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், 2022-2023 ஆண்டிற்கான சிறந்த மாணவர் விருது பொதுப்பிரிவில், இறுதியாண்டு இயந்திர பொறியியல் துறை மாணவர் ரகு நாத், மாணவியர் பிரிவில் இறுதியாண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவி சத்யாவிற்கும் வழங்கப்பட்டது.