இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதம் மற்றும் கணக்கீட்டு உயிரியல் தேசிய கருத்தரங்கம்

இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாகச் செயலர் பிரியா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தலைமை வகித்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நான்லீனியர் டைனமிக்ஸ் துறை பேராசிரியர் லக்ஷ்மணன் ஆராய்ச்சிக்கான நிதி வாய்ப்புகள் மற்றும் இயற்பியலின் உயிரியல் பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறித்து ஆரக்கிள் கார்ப்பரேஷன் கிளவுட் இன்ஜினியரிங் இயக்குநர் செல்வராஜு விவரித்தார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர் தகவலியல் துறையின் டேட்டா மைனிங் மற்றும் டெக்ஸ்ட் மைனிங் ஆய்வகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெயக்குமார் டேட்டா மைனிங் மற்றும் ஜெனோமிக் டேட்டா அனாலிசிஸ் குறித்து பகிர்ந்து கொண்டார்.