கே.ஐ.டி கல்லூரியில் அரூபா இன்குபேஷன் சென்டர் திறப்பு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) “அரூபா இன்குபேஷன் சென்டர்” திறப்பு விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரூபா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், “கேம்பஸ் டூ கார்ப்பரேட்” என்ற தலைப்பில் பேசினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பல்வேறு துறைக்கான மென்பொருள் வளர்ச்சிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு சிறந்த மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரிவதற்காண ஆணைகள் வழங்கப்படும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதல்வர் ரமேஷ், டீன்-வேலைவாய்ப்புத் துறைத் தலைவர் மகாலட்சுமி, டீன்-மாணவர் அமைப்பு சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.