இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை

ஐ.சிடி அகாடமி தமிழ்நாடு பிரிட்ஜ் 23, நடத்திய லேர்னத்தான் (LEARNATHON-2022) இணைய வழி கற்றலில், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த 5147 மாணவர்கள் கலந்துகொண்டு நவீன தொழில்நுட்பத்தில் 33,035 சான்றிதழ்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில், கூகுள், மைக்ரோசாப்ட், மாத்ஒர்க்ஸ், செள்நோனிஸ் உள்ளிட்ட 12 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 12 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இணைய வழி பயிற்சியை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர்.

இப்பயிற்சியின் மூலம் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தில் திறனை மேம்படுத்திக் கொண்டனர்.

ஐ.சிடி அகாடமி தமிழ்நாடு பிரிட்ஜ் 50 வது பதிப்பு கருத்தரங்கிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகையில், இது போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 1 ட்ரில்லியன் டாலர் எக்கனாமி அடைவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

இந்த இணைய வழி கற்றலில் தேசிய அளவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் இடத்தை பெற்ற இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விருது வழங்கி பாராட்டினார்.

இச்சாதனையை, இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், இணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் ஜெயா, டீன் மகுடீஸ்வரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.