வில்வித்தைப் போட்டி: கற்பகம் பல்கலை மாணவிக்கு வெள்ளி பதக்கம்

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற என்.பி.டி எல் சீனியர் நேஷனல் வில்வித்தைப் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழகத்தில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி சினேகா வர்ஷினி தமிழக அணி சார்பாக ரிகர்வ் பிரிவில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இவருக்கு, கற்பகம் பல்கலைக்கழக துணை வேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி மற்றும் உடற்கல்வித்துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.