‘பிசியோ எக்ஸெலென்சா’ போட்டியில் ரன்னர் அப் பட்டம் வென்ற கே.எம்.சி.ஹெச் கல்லூரி

எக்செல் பிசியோதெரபி கல்லூரியில் “பிசியோ எக்ஸெலென்சா” என்ற தேசிய அளவிலான அறிவியல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், 30 கல்லூரிகள் பங்கேற்றன.

கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி அறிவியல் விளக்கக்காட்சியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசையும், குறும்படத்தில் மூன்றாம் இடத்தையும், பேஷன் ஷோவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது. மேலும், கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி ஒட்டுமொத்த ரன்னர் அப் பட்டத்தை வென்றது.