கோ-ஆப்டெக்ஸில் வாடிக்கையாளர் சந்திப்பு

கோவை வ.உ.சி மைதானம் அருகிலுள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமையன்று வாடிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டு அவர்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முதுநிலை மண்டல மேலாளர் குமரேசன், ரகம் மற்றும் பகிர்மானம் முதுநிலை மேலாளர் நந்தகோபால், துணை மண்டல மேலாளர் அழகு சுந்தரம், விற்பனை நிலைய மேலாளர் செல்வன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.