ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சேவைக்கு பாராட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், 7 நாள் சிறப்பு முகாம், 24 வீரபாண்டி, மேல்பதி, கீழ்பதி, வீரபாண்டி புதூர் ஆகிய இடங்களில் வரை நடைபெற்றது.

இதன்படி சமுதாயத்தில் மாணவர் பங்கு என்ற தலைப்பில் சொற்பொழிவு, தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 24 வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றன. மருத்துவ முகாம், விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டன. சுற்று வட்டாரப் பகுதிகளில் நெகிழிப் பைகள் சேகரிக்கப்பட்டன. பள்ளி சுவற்றில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டன. சேவைப் பணியில் புதுமை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊர்ப் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மகளிர் தினவிழா நடைபெற்றது. டிஜிட்டல் கல்வியறிவு என்ற தலைப்பில் கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரத்த தானம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சியும், மது போதை குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்குத் தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்பட்டது. தபால் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிறைவு விழா அன்று ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் வரவேற்றுப் பேசினார்.

இந்துஸ்தான் சாரண, சாரணீயர் அமைப்பின் தலைவர் மற்றும் மாநில தலைமை ஆணையர் விஜயராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 7 நாள் சிறப்பு முகாமில் சிறப்பாக சேவையாற்றியமைக்காக நாட்டு நலப்பணித் திட்ட அமைப்புக்கு, 24 வீரபாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினசாமி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.