எஸ்.என்.எஸ் கல்லூரியில் விளையாட்டு விழா

டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் ராஜலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் எஸ்.என்.எஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமையுரை ஆற்றினார். கோவை வடக்கு துணை கமிஷனர் சந்தீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்: மாணவ மாணவிகள் சமூக வலைத்தளங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். அவற்றை முறையற்ற வழியில் பயன்படுத்தி தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்ளக்கூடாது.

மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க கூடாது. மாணவர்கள் தங்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு விளையாட்டு துறையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

விழாவில் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், முதன்மை அதிகாரி டேனியல், கல்லூரியின் முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ் குமார், மேலாண்மைத் துறை இயக்குனர் ஞானசேகரன், விரிவாக்கத்துறை முதன்மையர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஹரி நரசிம் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.