தொடர்ந்து சரியும் தங்க விலை

இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவ கொடுக்கப்படுகிறது. தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.41,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ. 5,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40க்கும், ஒரு கிலோ ரூ.67,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.