கேன்சரை தடுக்கும் சக்தி கொண்டது காளான்

விலையும் எக்கச்சக்கம். அதனால், மிகச் சுலபமாக அவற்றை வீட்டிலேயே வளர்த்து, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் உணவு தான் காளான். இது 100% சைவ உணவு. மழைக்காலத்தில் அங்கங்கு முளைப்பது பூஞ்சைக் காளான். நாம் இதை உட்கொள்ளக் கூடாது.

உலகில் பல நூற்றுக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. எல்லாவற்றையும் உட்கொள்ள இயலாது. சமையலுக்கு என்று தனியாக வளர்த்து கடைகளில் விற்பதை மட்டுமே உணவில் சமையலில் உபயோகிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மொட்டுக் காளான் , சிப்பிக் காளான் என சில வகை மட்டுமே கிடைக்கின்றன. காளான்களுக்கு அதிக முக்கியத்துவம் வந்ததற்கு காரணம் இதில் உள்ள மிகக்குறைவான கலோரிகள். சிறந்த புரதச் சத்தைக் கொண்டது. குறைவான கொழுப்பு உடையது. அதுவும் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு கொண்டதால், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உண்ண நினைக்கும் உணவு. காளான் எளிதில் ஜீரணமாகக் கூடியது. சமைப்பதற்கு மிகக்குறைவான நேரம்தான் தேவை.

இதில் அதிகமான பொட்டாசியமும் குறைவான சோடியமும் உள்ளதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல உணவாகக் கருதப்படுகிறது. புரதம் அதிகமாகவும் நார்ச்சத்தும் உள்ளதால் நீரிழிவு உள்ளவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.

இதில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் பாந்தியானிக் ஆசிட், பி2, பி3, பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் ஆகியன உள்ளன. மினரல்களில் ‘காப்பர்’ அதிக அளவு உள்ளது.

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஒரே உணவில் இத்தனை இருப்பது அரிது. இதைத் தவிர கேன்சர் வராமல் பாதுகாக்கக்கூடிய சக்தி இதில் உண்டு என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

காளான்களை எப்படி தேர்ந்தெடுப்பது?

*    காளானில் எந்த புள்ளிகளும், கோடுகளும் இல்லாமல், உறுதியாக இருக்கும் காளான்களை தேர்ந்தெடுங்கள்.
*    காளான்கள் நடுத்தர அல்லது பெரிய அளவில் இருக்க வேண்டும். நீங்கள் அவற்றை வாங்கும்போது அவை மெலிதாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
*    புதிய காளான்களை ஒரு ஜிப்-லாக் பேக் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் காகிதப் பையில் வைக்கலாம்.
*    நீங்கள் வாங்கிய காளான்களை முதலில் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை முழுமையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
*    காளான்களின் சுவைகளை அனுபவிக்க, அவற்றை நீண்ட நேரம் சமைக்காமல் இருப்பது நல்லது.