பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கோவை, பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் “சக்தி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பி.எஸ்.ஜி ரீசர்ச் அண்ட் இன்னோவேஷன் டைரக்டர் டாக்டர் சுதா ராமலிங்கம் வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக விமன்ஸ் சென்டரின் இயக்குனர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் மற்றும் ரேடியட் பாசிடிவ்விட்டி ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் பிரியா செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மேலும், இந்நிகழ்வில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சுப்பா ராவ், மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன், குழந்தைகள் நல அறுவைசிகிச்சை மருத்துவர் பாவை அருணாச்சலம் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.