தினமும் முட்டை சாப்பிடலாமா?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியே உள்ளது. நிறைய சாப்பிட்டால் எல்லா வகை உணவுகளுமே சில பிரச்சினைகளை நமக்கு ஏற்படுத்தக் கூடும். அதேபோல ஒரே உணவை நாம் தினமும் எடுத்து்க் கொள்வதை விரும்பவே மாட்டோம். முட்டை தினமும் எடுத்துக் கொள்ளும் ஓர் உணவாக நாம் வைத்திருக்கிறோம்.

இப்படி தினமும் எடுத்துக் கொள்ளலாமா என்பதும் நமக்குத் தெரியாது. அறிவியல் ரீதியாகவும் இந்த கேள்விக்கு சரியான பதில் இல்லை என்று தான் சொல்கின்றனர்.

இதுகுறித்து அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் (american journal of clinical nutrition) என்னும் ஆய்வில் கூறியதாவது பொதுவாக உயர் ரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு ஆகிய பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களுடைய உணவில் முட்டை மட்டுமல்லாது இயல்பாகவே கொலஸ்டிராலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது என்று குறிப்பிடுகிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கொலஸ்டிரால் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் மட்டுமே 90 மில்லி கிராம் அளவுக்கு கொலஸ்டிரால் இருக்கிறது. ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவையான தினசரி கொலஸ்டிரால் தேவையில் பாதி அதாவது ஒரு நாளைக்கு ஒரு முட்டைக்கு மேல் மஞ்சள் கருவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

உயர் கொலஸ்டிரால் பிரச்சினை, நீரிழிவு, விதைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்

தினசரி உணவில் முட்டையை அதன் மஞ்சள் கருவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது உடலில் கொலஸ்டிராலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இந்த கொலஸ்டிரால் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு ஆபத்துகள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

​ஜீரண சக்தி பாதிக்கப்படும்
அதிக அளவு முட்டை சாப்பிடும்போது அது ஜீரணமடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சில சமயங்களில் சரியாக ஜீரணமாகாமல் அடிவயிற்று வலி ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இன்சுலின் சகிப்புத் தன்மை
அதிகமாக முட்டை சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலி்ன் சகிப்புத் தன்மையில் குறைபாடு உண்டாகுமாம். தினசரி உணவில் முட்டையை நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்டே வருபவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவில் நிச்சயம் மாற்றங்கள் உண்டாகும்.