தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தேசிய அறிவியல் தினம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளைச் சேர்ந்த 247 பள்ளிகள் கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்றன.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி தனது சிறப்புரையில், 1960களில் தானியங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்திய இன்று ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அறிவியல் ஆராய்ச்சி பெரும் பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்த வருடம் 23 அதிக விளைச்சல் தரும் வகைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது என்பதைக் குறிப்பிட்டார். மேலும் கொரோனா பெருந்தொற்றின் போதும் உக்ரைன் போரின் போதும் இந்தியா தானியங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்தது. அனைத்து யோசனைகளும் வணிக பயன்பாட்டிற்கு காப்புரிமை பெற வேண்டும் என்று மாணவர்களை அறிவுறுத்தினார். இறுதியாக போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பேராசிரியரான ஹரி கிருஷ்ணன் தனது பாராட்டு உரையில், மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாக இருக்க ஊக்குவித்தார், மேலும் அறிவியலில் வெற்றிக்கான திறவுகோல் “ஏன்” என்ற கேள்வியைக் கேட்க அவர்களை ஊக்குவித்தார். தோல்வியை ஏற்ப்பதும், கடின உழைப்பும் அறிவியலில் வெற்றி பெற தேவையானவை எனத் தெரிவித்தார்.

புதுதில்லியின் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் உதவி இயக்குநர் (பொது) வேல்முருகன் தனது உரையில், விஞ்ஞானி ஆவதற்கான திறவுகோல் “உங்களை நீங்களே கண்டுபிடிப்பதும், நீங்கள் என்னவென்று நீங்களே கேட்டுக்கொள்வதும்” என்று குறிப்பிட்டார்.

நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அறிவியல் உண்மையாகவே இருக்கும். முதலில் மாணவர்கள் அதனைப், புரிந்து கொண்டு, நல்ல ஆராய்ச்சியாளராகவேண்டும். கண்டுபிடிப்புகளை பரப்புவதற்கு தொடர்பு முக்கியமானது, என்றார்.