கோவை மாநகராட்சி பொது பட்ஜெட்: இணைய தளத்தில் கருத்து தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சியில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் (வரவு – செலவு திட்ட அறிக்கை) குறித்து, மக்கள் இணையதளம் மூலமாக கருத்து தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: கோவை மாநகராட்சி 2023-2024-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் சார்ந்த கருத்துக்களை கோவை மாநகரப் பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக “எனது நகரம் எனது பட்ஜெட் ”- MY CITY MY BUDGET
(https://coimbatoresmartcity.org/mycity-mybudget) என்ற இணைய தளத்தின் வாயிலாக தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.