கோவையில் முதல் முறையாக தொழில்முறையிலான குத்துச்சண்டை

கோவையில் முதல் முறையாக தொழில்முறை குத்துச் சண்டை மார்ச் 4 ஆம் தேதி, # 6 ஹோட்டலில் மாலை 4.30 மணிமுதல் இரவு 9.30 வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட குத்துச்சண்டை சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், குத்துச்சண்டை மேலாண்மை தலைவராக செயல்பட்டு வரும் எப்7ஹப் உரிமையாளர் ராயன் கூறியதாவது: தென்னிந்திய அளவிலும், கோவையிலும் குத்துச்சண்டைக்கு அவ்வளவாக நாம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பயிற்சிக்கும், வழிகாட்டுதலுக்கும் சரியான தளம் இல்லை. குத்துச்சண்டை வீரர்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

எங்களது நோக்கம், குத்துச்சண்டை வீரர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு சர்வதேச அளவில் சண்டையிட வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும். கோவையில் முதல் முறையாக தொழில்முறையிலான குத்துச்சண்டை நிகழ்ச்சியை  இந்திய பாக்ஸிங் கவுன்சில் அனுமதியோடு நடத்துகிறோம்.

இந்த நிகழ்வில் 4, 6 மற்றும் 8 சுற்றுக்கள் குத்துச்சண்டைகள் நடக்கும். முக்கிய நிகழ்ச்சி 8 சுற்றுக்களைக் கொண்டது. சென்னையிலிருந்து இரண்டு டபிள்யுபிசி இன்டியா வெற்றியாளர், டபிள்யுபிசி ஆஸ்திரேலியா வெற்றியாளர் ஆகியோர் முதன்மை விளையாட்டில் சண்டையிடுகின்றனர்.

இந்தியா முழுவதிலுமிருந்து பஞ்சாப், ஹைதராபாத், டில்லி, ஆந்திரபிரதேசம், ஜார்கண்ட், மும்பை, பெங்களுரு, சென்னை, கோவா, மணிப்பூர், ஹரியானா, மற்றும் கோவையிலிருந்தும் வீரர்கள் பங்கேற்கின்றனர். தற்போது கோவையில் 7 வீரர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்க தயாராகியுள்ளனர் எனத் தெரிவித்தார்.