தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தொழில் முனைவோருக்கு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோருக்கு வேளாண் தொழில் நிறுவுவதற்கான பயிற்சி நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நடந்தது.

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் இயக்குநர் சோமசுந்தரம் பயிற்சியை துவக்கி வைத்து வேளாண் வணிகத்திற்கான வாய்ப்புகளை குறித்து பேசினார்.

வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளிலிருந்து 30 தொழில் முனைவோர்கள் பயிற்சியில் பங்கு பெற்றனர். வணிகத்திட்டம் தயாரித்தல், வணிகத்திற்கான செலவு பகுப்பாய்வு, முதலீட்டுத்திட்டம், தொழில் நுட்ப வணிக காப்பகத்தின் செயல்பாடுகள், வணிகம் சார்ந்த சேவைகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு பயிற்சியானது நடைபெற்றது.

இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான கடனுதவியும், ரூ.2 லட்சம் வரையிலான மானியமும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.