இந்துஸ்தான் பள்ளியில் 24 வது விளையாட்டு விழா

இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 24 வது விளையாட்டு விழா நடைபெற்றது. சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் என நான்கு குழுக்களாக பிரித்து பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 100மீ, 200மீ, 400மீ, 1500மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் என பல தடகளப் போட்டிகளும் வாலிபால், புட்பால், த்ரோபால், கபடி என பல குழுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

இதில் பெண்கள் பிரிவல் 11 ம் வகுப்பைச் சேர்ந்த சனூஜா மற்றும் மாணவர்கள் பிரிவில் 10ம் வகுப்பைச் சேர்ந்த சலீம்பாஷா ஆகியோர் சிறந்த விளைாயாட்டு வீரருக்கான பட்டத்தை பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சிவப்பு நிற அணி 106 புள்ளிகளுடன் முதலிடத்தை தட்டிச்சென்றது. பச்சை நிற அணி 94 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றது. மாணவர்கள் வழுக்கு மரம் ஏறி மிகச்சிறந்த திறமகளை வெளிப்படுத்தினர். மேலும் உறியடி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை, பீளமேடு சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலர் பிரியா சதீஸ்பிரபு, பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.