இந்துஸ்தான் கல்லுரியில் தென்னிந்திய அளவிலான கலை கொண்டாட்டம்

கோவை, அவிநாசி சாலை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் “ஹிலாரிக்காஸ்-2023” என்ற தலைப்பில் தென்னிந்திய அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த இந்நிகழ்வு இரண்டு ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக துவங்கியது.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிராதப் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணைய்யன், செயலாளர் பிரியா, தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இக்கலை நிகழ்ச்சியில் குழுநடனம், தனிநபர் நடனம், பாட்டுக்குப்பாட்டு, வினாடிவினா, முகஅலங்காரம், காய்கறிகளில் அலங்காரம், பூ அலங்காரம், கோலப்போட்டி, புகைப்படப் போட்டி இப்படி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.