கே.எம்.சி.ஹெச் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

கே.எம்.சி.ஹெச். மருந்தியல் கல்லூரியில், “அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் பாலினச் சமநிலை மற்றும் கிராமப்புற பகுதிகளில் பாலின சமநிலை மற்றும் நுண்ணிய வன்முறை” என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.நல்ல ஜி பழனிசாமி, கோவை மருத்துவ மையம், ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது .

ஓரிகான் மாநில பல்கலைக்கழகத்தின் பெண்கள், பாலினம் மற்றும் பாலியல் ஆய்வுகள் பேராசிரியர் சூசன் சாவ் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். சாண்டியாகோ டி காம்போஸ்ட்டேளா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை முனைவர்கள் லாரா பல்லர்ஸ் அம்மனிரோ, சாண்டோஸ் சொல்லா ஸோஸ் மனுவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர் .

டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, பெண்கள் தைரியமாக முன்வரவும், அவர்கள் விரும்பும் துறைகளில் வெற்றிபெறவும் ஊக்குவித்தார். இதன் தொடர்சியாக பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுத் துறை இணைப் பேராசிரியை கமலவேணி பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அதன்பின் சூசன் எம் ஷாவு, லாரா பல்லர்ஸ் அம்மனிரோ ஆகியோர் கருத்தரங்கில் தங்களது எண்ணங்களையும், யோசனைகளையும் பகிர்ந்து கொண்டார். இக்கருத்தரங்கில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.