குஜராத்தில் பறவைகளுக்கான மாரத்தான் போட்டி

குஜராத் மாநிலத்தில் பழங்குடியினப் பகுதியில் பறவைகளின் இனங்களைக் கண்டறிந்து பதிவு செய்ய, கிரேட் குஜராத் பறவை மராத்தான் 2023, வரும் 17-ஆம் தேதி தொடங்கி 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

பொதுவாகவே மாரத்தான் போட்டிகள் என்பது பல்வேறு நோய்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையிலும், அவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடத்தப்படும்.

ஆனால் குஜராத் மாநிலம், பஞ்சமஹால் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ள மாரத்தான் போட்டியோ மனிதர்களுக்கிடையேயான போட்டி கிடையாது. சற்று வித்தியாசமாக நாம் பார்த்து ரசிக்கும் பறவைகளுக்கிடையே நடத்தப்படும் போட்டி.

முதன்முறையாக, மத்திய குஜராத்தின் பழங்குடியினப் பகுதியில் பயணிக்கும் பறவைகளின் இனங்களைக் கண்டறிந்து பதிவு செய்ய, பறவை மாரத்தான் – கிரேட் குஜராத் பறவை மராத்தான் 2023 (ஜிஜிபிஎம்) – ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் 200 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் பறவை இனங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும்.

இந்த மாரத்தானை இயற்கை பாதுகாப்புக்கான சமூகம் ஏற்பாடு செய்துள்ளது. இது பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோல் சார்ந்த சிவரஞ்சனி அறக்கட்டளையின் இயற்கைக் கல்வி மற்றும் பாதுகாப்புத் திட்டத்தால் தொடங்கப்பட்டது.

இந்த குழு நடத்தும் மாரத்தான் போட்டியில் நான்கு நாட்களுக்கு தினமும் பறவைகளை 12 முதல் 14 மணி நேரம் வரை உலா வரும்.

இதன் மூலம் ஜிபிபிசிக்கு பறவைகள் குறித்த தரவுகளை சேகரிக்க உதவும் என்று நம்புவதாக கோகோன் திட்ட மேலாளரும் ஜிபிபிசியின் பஞ்சமஹால் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான வீனஸ் ஜோஷி கூறியுள்ளார்.

மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் பறவைகள் நான்கு நாட்களில் ஹலோல், ஷிவ்ராஜ்பூர், ஜம்புகோடா, துங்கர்வந்த், கெவ்டி மற்றும் ரத்தன்மஹால் வழியாக பயணித்து செல்லும் என்றும், அனைத்து பறவைகளின் அறிவியல் நடைமுறைகளின் ஆரம்ப செயல்பாடுகள் குறித்த ஒவ்வொன்றையும் eBird பயன்பாட்டில் 15 நிமிடங்கள் தொடர்ச்சியான சரிபார்ப்பு பட்டியல்கள் மூலம் பதிவு செய்யப்படும், என்றும் ஜோஷி கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர் இந்த நிகழ்வின் மூலம் அப்பகுதியில் இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை, அவற்றின் பரவல் மற்றும் வாழ்விடத்தை மதிப்பீடு செய்ய முடியும்.

இந்த மாரத்தான் ஓட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட பறவைகள் பங்கேற்க உள்ளன. சில பங்கேற்பாளர்கள் வெள்ளிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களும் நிகழ்வில் இணைவார்கள். மற்றவர்கள் தங்கள் வசதிக்கேற்ப குறைந்த நாட்களே பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

 

 

source: news7tamil