உணவுப்பொருளில் தலைதூக்கும் கலப்படம்

முன்பு உணவு பொருளில் கலப்படம் நடக்கும், ஆனால் தற்போது உணவு பொருளே கலப்படமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலப்படத்தை தடுக்க உணவு கலப்பட தடை சட்டம் 1954ல் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

நல்லெண்ணை எள்ளில் இருந்து எடுக்கப்படுகிறது, ஆனால் இங்கு கொடுமை என்னவென்றால் எள் இல்லாமலேயே நல்லெண்ணை தயாரித்து வரும் மோசடி தலைதூக்கி இருக்கிறது.

குப்பையில் கொட்ட கூடிய நாள்பட்ட முந்திரி பருப்பை வாங்கி அதனை செக்கில் இட்டு நசுக்கி கழிவு எண்ணெய் எடுக்கப்படுகிறது என்று சொல்ல படுகிறது.

விலை குறைந்து விற்கும் பாமாயில் அல்லது ரைஸ் ஆயில் 15 கிலோ உடன் அரை கிளை முந்திரி பருப்பு கொட்டி கடந்தால், நல்லெண்ணெய் வாசத்தில் கலப்பட எண்ணெய் கிடைக்கிறது.

அடுத்தபடியாக மஞ்சள் தூளா அல்லது மங்கள் தூளா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி குழம்பு மிளகாய் தூளில் செங்கல் பொடி, மல்லி தூளில் மரத்தூள், குதிரை சாணம், மஞ்சள் தூளில் கறியாகிறோமேட் மற்றும் மெத்தனால் எல்லோ ரசாயனம் கலந்து பெயரிட படாத பாக்கெட்டுகளில் அடைத்து விற்று வந்துள்ளனர்.

இது போன்று நாம் அதிகம் பயன்படுத்தும் தூள் வகைகளில் கலப்படம் செய்யும் போது நூறை ஈரல், மார்பு, தொண்டை, கண், எலும்பு மற்றும் கல்லீரல் கட்டி, குழந்தைகள் ஊனமுறுதல் போன்ற நோய்கள் உருவாகின்றன.

ஆரோக்கியமான நெய்யில் ஏராளமான கலப்படங்கள் புகுந்து விளையாடுகிறது. நெய்யில் வனஸ்பதி, மெருகு கொழுப்பு, வெண்ணெய்யில் மைதா, மணிலா மாவுகள் கலந்து விற்பனை ஆகிறது என்று சொல்லப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் உச்சமாக இக்காலத்தில் பிளாஸ்டிக் உணவுகள் வருகையும் பெரும் அச்சத்தை தந்துள்ளது. மண்ணுக்குள் கிடந்தாலும் மக்கி போக முடியாத இந்த பிளாஷ்டிக்கை உண்டால் உணவு குழாயில் துவங்கி செரிமான உறுப்புகள் வரையிலும் அத்தனை இயக்கத்தையும் கெடுத்து உண்டவரின் உயிரை எடுத்துவிடும் கொடூரத்தை நிகழ்த்துகிறது.

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை வரையிலும் தமிழகத்துடன் தென்மாநிலங்களிலும் ஊடுருவி இருக்கிறது. இதனால் வயிறு வலியில் தொடங்கி செரிமான கோளாறில் பயணித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு, இதனை தொடந்து உண்டால் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, மாரடைப்பு, ரத்தக்குழாய் வெடிப்பு வரையிலும் கொண்டு போய் உயிர் பறிக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்று கூறப்படுகிறது. மக்களே விழித்து கொள்ளுங்கள்.