எலுமிச்சை தேன் தண்ணீர் குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை

உடல் இடை குறைப்பு, அஜீரண கோளாறுகளை சரி செய்தல், என பல மருத்துவ பயன்களை பெற்றுள்ளது எலுமிச்சை தேன் தண்ணீர். இதனை தினமும் காலையில் குடிப்பவர்களுக்கு என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை இத்தொகிப்பில் காண்போம்,

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களின் எனாமலை அரிது உராய்வு ஏற்படுத்த கூடும். எலுமிச்சை சாறு குடுத்த உடம் பல் துவக்குவதும் நிலைமையை மோசமாக்கும் என்பதால், அதற்கு பதிலாக தண்ணீர் பருக வேண்டும். அமிலத்தாக்கம் அதிகமாகும் என்பதால் அல்சர் நாள்பட்ட வயிற்று பிரச்னை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் எலுமிச்சை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

எலுமிச்சை தோலையும் சிலர் சாற்றில் சேர்த்து கொள்வார்கள், ஆனால் பல வகையான நோய் தாக்கும் கிருமிகள் சுலபமாக எலுமிச்சை தோளில் வளர்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

வாய்ப்புண்களை அதிகப்படுத்தும் தன்மை சிட்ரிக் அமிலத்தில் இருக்கும் என்பதால், அந்த பிரச்னை உள்ளவர்கள் எலுமிச்சை சாறு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கூறும் மருத்துவர்கள் சிறப்பான பலன்களை பெற எலுமிச்சைகளை சரியாக மற்றும் அளவாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்