கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டமும், 2023 – 25 ஆகிய 2 ஆண்டுகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட புது நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியும் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் ஹோட்டல் அன்னலெட்சுமியின் நிர்வாக இயக்குனர் ராமசாமி தலைவராகவும், ஹரி பவனம் ஹோட்டல்களின் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் ராஜு செயலராகவும் சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவிந்தராஜன் பொருளாளராக தொடர்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

சங்கத்தின் துணை தலைவர்களாக வஞ்சிமுத்து (பூமராங் ஐஸ் கிரீம்), மணிகண்டன் (ஸ்ரீ ஆனந்தாஸ்), காமராஜ் (பொள்ளாச்சி) மற்றும் கிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இணை செயலர்களாக ஜெகன் தாமோதரசாமி (ஸ்ரீ அன்னபூர்ணா), டேவிட் (கொக்கரக்கோ), ராஜன் (வளர்மதி ஹோட்டல்ஸ்), வெங்கடேஷ் (ஸ்ரீ ஆனந்தாஸ்) மற்றும் சுந்தரராகவன் (பொள்ளாச்சி) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் பற்றி புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் ராமசாமி மற்றும் செயலர் பாலச்சந்தர் ராஜு கூறுகையில்: வரும் இரண்டு ஆண்டுகளில் சங்கத்தின் உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கவுள்ளோம். அத்துடன் வருடம் முழுவதும் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் அடங்கிய நாற்காட்டியை ஏற்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

சங்கம் சார்பில் மாரத்தான் போட்டிகள், ரத்த தான முகாம்கள், கிரிக்கெட் டீம் உருவாக்கி போட்டிகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டில் உணவு திருவிழா நடத்துவது, சங்கத்திற்க்கான மேம்படுத்தப்பட்ட புது இணையதள பக்கத்தை உருவாக்கவும், அதன் மூலம் உறுப்பினர்கள் தகவல்கள், சேர்க்கை மற்றும் சந்தா கட்டுதல் போன்ற பணிகளை எளிதாக்கவும் உள்ளோம். அதேபோல் 2 ஆண்டுகளில் சங்கத்திற்கான புது அலுவலகத்தை கட்டவும் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தனர்.