அதிசயிக்க வைக்கும் தேங்காய் தண்ணீரின் நன்மைகள்

பொதுவாக நமது வீடுகளில் நம்முடைய அம்மா சமையல் செய்வதற்க்காக தேங்காய் உடைப்பார்கள், அப்படி உடைக்கும் போது நாம் அனைவரும் அதில் இருந்து வெளிவரும் தேங்காய் தண்ணீருக்காக காத்திருப்போம். அதிலிருந்து கிடைக்கும் தண்ணீர் என்றால் அனைவருக்கும் அவ்வளவு பிடிக்கும் என்றே சொல்லலாம்.

இத்தகைய தேங்காய் தண்ணீரில் ஒளிந்திருக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

தேங்காய் தண்ணீரில் நம் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளை கொண்டிருக்கிறது. தினமும் தேங்காய் அருந்துவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தேவையோ அத்துணை நன்மைகளும் தேங்காய் தண்ணீரில் அடக்கி வைத்துள்ளது.

இதனை அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்காது. உடலுக்கு கொழுப்பு சேராது. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். செரிமான பிரச்சனைகள் தீர்வதோடு வாயு தொல்லையும் நீங்குகிறது.

பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவற்றை அளித்து நம் உடலை பாதுகாக்கிறது. தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து அதன் சுரப்பியை செயல்பட வைக்கும்.

முக்கியமாக உடலிற்கு பொலிவான தோற்றத்தையும், உடல் ஆற்றலையும் தேங்காய் தண்ணீர் அருந்துவதன் மூலம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.