எஸ்.என்.எம்.வி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் தொழில்முறை கணக்குப்பதிவியல் துறைசார்பாக “இந்திய பொருளாதாரத்தில் ஸ்டார்டப்களின் பங்கு” எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கேரளாவைச் சார்ந்த தொழில்முனைவோர் விக்டர் அ கிரேக், சென்னை விநாயகா மீ’ன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலை மற்றும் அறிவியல் புலத்தின் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய பொருளாதாரத்தில் தொழில்முனைவோரது பங்கு, அரசாங்கத்திலிருந்து கிடைக்கும் உதவி, சிறு தொழில் முனைவோர்களுக்கான பயன்பாடு, மாணவர்களின் பங்கு, திறன் மேம்படல் குறித்து கூறினர்.

நிகழ்விற்கு எஸ்.என்.எம்.வி கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்றார். மேலாண்மை இயக்குனர் முத்துகுமார் வாழ்த்துரை வழங்கினார். இதில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மாணவ, மாணவிகள் என 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.