கே.பி.ஆர் கல்லூரியில் வடிவமைப்பு சிந்தனை குறித்த கருத்தரங்கு

கே.பி.ஆர் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டுத்துறை சார்பில் “வடிவமைப்பு சிந்தனை” பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் கீதா தலைமையுரை வழங்கினர். வணிகவியல் துறையின் புல முதன்மையர் குமுதாதேவி மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டுத்துறை துறைத்தலைவர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கோயம்புத்தூர், BRANDINGBEEZ, தலைமை நிர்வாக அதிகாரி விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு பேசுகையில்: ஒரு தொழில்முனைவோரின் கருத்துக்கள் மற்றும் போராட்டங்கள் குறித்த தனது ஆழ்ந்த அறிவை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொண்டார்.

அறிவுத்திறன் மற்றும் வாழ்க்கையில் ஆர்வத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார். தொழில்முனைவோர் திறன்களின் நோக்கத்தை விளக்கினார். நேர நிர்வாகத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேலும் ஒவ்வொரு தனிநபரும் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தங்களின் சொந்த அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.