பாரதிய வித்யா பவனில் பாரதியாரின் சிலை திறப்பு

கோவை அஜ்ஜனூர் பகுதியில் உள்ள பாரதிய வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரதியாரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் பள்ளியின் மாணவ மாணவியர்கள் பாரதியாரின் சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாரதிய வித்யா பவன் கோவை மையத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு புதுச்சேரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் கிருங்கை சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் பள்ளியின் செயலாளர், முதல்வர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.