அதானி குழும விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அதானி குழும விவகாரம் தொடர்பான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்து நாடாளுமன்றகூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு நடைபெற்ற தொடர் அமளி காரணமாக இரண்டு நாட்களாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று 3ம் நாள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்த நிலையில், அதானி குழுமம் மீது பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.