கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது. கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் நாளை எல்லாப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் நாளை மறு நாள் மாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.