ஆர்.எஸ்.புரத்தில் தங்கம், வைரம், வெள்ளி நகை பயிற்சி மையம் துவக்கம்

கோவையில் முதல் முறையாக பெண்களுக்காகவே பெண்களால் நடத்தப்படும் தங்கம், வைரம், வெள்ளி நகை தயாரிப்பு தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி மையம் டைமண்ட்ஸ் இந்தியா சார்பில் ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் தொடங்கப்பட்டது.

துவக்க விழாவிற்கு சென்னை டைமன் மற்றும் நகைகள் வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டைமண்ட்ஸ் இந்தியா நிறுவனர் முரளிதரன், தமிழ்நாடு மற்றும் கோயம்புத்தூர் ஜுவல்லரி சங்க தலைவர் சபரிநாத், கோயம்புத்தூர் ஜுவல்லரி சங்க தலைவர் முத்து வெங்கட்ராம், வைசியான் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

வைரத் தொழிலில் 35 வருட அனுபவம் கொண்ட முரளிதரன் தலைமையில், அகிலாண்டேஸ்வரி முரளிதரன் மற்றும் சேஷகோபால் முரளிதரன் இங்கு பயிற்சி அளிக்கின்றனர்.

வைர, தங்க, வெள்ளி நகைகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள தொழில் முனைவோருக்கு சிறந்த வகையில் தொழில் தொடங்க தேவையான எல்லாவிதமான பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சி காலம் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை இருக்கும்.

மேலும், வருடம் தோறும் தகுதியான மகளிர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக 100% ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.